சமத்துவ மக்கள் உரிமை கழகத்தின் நிறுவன தலைவர் வி. கே .சீனிவாசன் கோரிக்கை !
வேலூர் மாவடடம் இன்றைய தினம் தமிழகத்துடைய அரசு சிறப்பான முறையில் செயல்பட்டுக்1 கொண்டிருக்கிறது அவ்வழியிலும் குடியாத்தம் பகுதியில் ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகவும் கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டு மன வேதனைக்கு குள்ளாகி இருக்கிறார்கள் காரணம் அவர் அவர்தேவைக்கேற்ப உதவியாளர்கள் அவர்களிடம் இல்லாததால் தேவைக்கு பணம் தேவை கூடிய நேரத்திலே ஆந்திரா கர்நாடகா ஆகிய அன்நிய மாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் குடியாத்தம் சுற்று வட்டார பகுதிகளில் வீடு வாடகைக்கு எடுத்து ஆபிஸ் அலுவலகம் வைத்து கொண்டு குடியாத்தம் நகரம் மற்றும் கிராம பகுதிகளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று பெண்கள் தாய்மார்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி நாங்கள் மகளிர் சுய உதவி குழு என்ற பெயரில் பணம் தருகிறோம் ஆகையால் நீங்கள் 10 பேர் கொண்ட குழு அமைத்து உங்களுடைய ஆதார் கார்டு ஓட்டுஐடி, பான் கார்டு ஜெராக்ஸ் கொடுத்து பணம் 20,000 முதல் ஒரு லட்சம் வரைபெற்றுக் கொள்ளலாம் என்று பகுதி பகுதியாக சென்று மக்களிடம் கூறி வருகிறார்கள் இது குறித்து மக்களும் பணம் பெற்றுக் கொண்டு வாரம் மாதம் தவணையாக கட்டி வருகிறார்கள் குறிப்பாக உங்கள் வீட்டில் நீங்கள் நோயால் அவதிப்பட்டு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்தாலும் உங்கள் வீட்டில் இறப்பு நேர்ந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை நீங்கள் பணம் கட்டிஆக வேண்டும் என்று பொதுமக்களை மிரட்டுவதும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்வதும் போன்ற தேவை இல்லாமல் வார்த்தைகளை பேசி மன உளைச்சல் செய்வதும் வாடிக்கையா செய்து வருகிறார்கள் மகளிர் குழு மேனேஜர் மற்றும் பணியாளர்கள் இதனால் பொதுமக்கள் உயிரை மாய்த்துக் கொள்வதும் வழக்கமாக ஆங்காங்கே நடக்கின்றனர் இதனால் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நம்முடைய நல்ல ஆட்சி சிறப்பான ஆட்சி செயல்பட்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் மக்களுக்கு தேவை படக்கூடிய பண உதவிகள் தமிழக அரசு மூலம்தாட்கோ லோன் வழங்க இந்தநிலையில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட நடுத்தரமக்களுக்கு எஸ். சி .எஸ். டி. பழங்குடியினர் மக்களுக்கு கடன் வழங்குமாறு தமிழக அரசிடம்சமத்துவ மக்கள் உரிமை கழகத்தின் நிறுவனத் தலைவர் வி. கே .சீனிவாசன் கோரிக்கை யாக வைத்துள்ளார்அக்கட்சியின் கழகத் தோழர்கள் பொதுச் செயலாளர் ராம்குமார், மாநில மகளிர் அணி தலைவி லட்சுமி, மற்றும் மாநில துணை மகளிர் அணி தலைவி விஜயா, மாநில மகளிர் அணி செயலாளர் அலமேலு, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் பாரதி, மாநில செயலாளர் டேவிட், மாநில பொருளாளர் ரூபன், மாவட்ட துணைத் தலைவர் ரவி, மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கிளை சார்பாகவும் கோரிக்கையை முன் வைக்கிறேன் என்று சமத்துவ மக்கள் உரிமை கழகத்தின் நிறுவனத் தலைவர் வி .கே. சீனிவாசன் கூறினார்