வேலூர் காவல் சரகத்தில் 54 காவல் ஆய்வாளர்கள் திடீர் பணியிட மாற்றம்: டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் அதிரடி உத்தரவு!

sen reporter
0


வேலூர் காவல் சரகத்தில் 54 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வேலூர் காவல் சரகத்தில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். இந்த நான்கு மாவட்டங்களில் பணியாற்றும் 54 காவல் ஆய்வாளர்களை வேலூர் சரக டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருவண்ணாமலை டவுன் காவல் ஆய்வாளர் ஆனந்தன் காட்பாடி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆகவும், லத்தேரி இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் ஆகவும், சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் முரளிதரன் லத்தேரி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆகவும், வேலூர் மாவட்ட தீவிர குற்றங்கள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் காந்திமதி வேலூர் மாவட்ட ஐயூசிஏடபள்யூ இன்ஸ்பெக்டர் ஆகவும், வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் நாகராஜன் பாகாயம் இன்ஸ்பெக்டர் ஆகவும், திருப்பத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் குமார் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ஆகவும், அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வேலூர் கலால் இன்ஸ்பெக்டர் ஆகவும், வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாபு ரவிச்சந்திரன் வேலூர் மாவட்ட தீவிர குற்றங்கள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகவும், காட்பாடி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் கே. வி. குப்பம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆகவும், நாட்றம்பள்ளி இன்ஸ்பெக்டர லதா  சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 அதேபோன்று திருப்பத்தூர் மாவட்ட ஐயுசிஏ டபிள்யூ இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகவும், சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் ராஜா பொன்னை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆகவும், காவேரிப்பாக்கம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகவும், பாகாயம் இன்ஸ்பெக்டர் காண்டீபன் வேலூர் தெற்கு இன்ஸ்பெக்டராகவும், போளூர் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ராணி குடியாத்தம் மகளிர் இன்ஸ்பெக்டராகவும், பெரணமல்லூர் இன்ஸ்பெக்டர் சியாமளா காட்பாடி மகளிர் இன்ஸ்பெக்டர் ஆகவும், ஆற்காடு டவுன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சசிகுமார் ராணிப்பேட்டை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சண்முகம் காவேரிப்பாக்கம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆகவும், வேலூர் தெற்கு இன்ஸ்பெக்டர் விசுவநாதன் ராணிப்பேட்டை நக்சலைட் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகவும், ராணிப்பேட்டை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி ஆற்காடு டவுன் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 வேலூர் மாவட்ட ஏசி டி யு இன்ஸ்பெக்டர் பாரதி சோளிங்கர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஆகவும், அரக்கோணம் மகளிர் இன்ஸ்பெக்டர் காஞ்சனா ராணிப்பேட்டை மாவட்ட ஏ சி டி யூ இன்ஸ்பெக்டர் ஆகவும் வேலூர் மாவட்ட ஐயூசிஏ இன்ஸ்பெக்டர் பாரதி ராணிப்பேட்டை மாவட்ட ஐயூசிகேடபிள்யு இன்ஸ்பெக்டர் ஆகவும், திருப்பத்தூர் ஏசி டி யு இன்ஸ்பெக்டர் பேபி வாணியம்பாடி தாலுகா இன்ஸ்பெக்டர் ஆகவும், போளூர் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய யுவராணி திருப்பத்தூர் மாவட்ட ஏ சி டி யு இன்ஸ்பெக்டர் ஆகவும், வாணியம்பாடி தாலுகா இன்ஸ்பெக்டர் பழனி திருப்பத்தூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் இன்ஸ்பெக்டராகவும், சோளிங்கர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி நாட்றம்பள்ளி இன்ஸ்பெக்டர் ஆகவும், பொன்னை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அன்பரசி திருப்பத்தூர் மாவட்ட ஐயுசிஏடபள்யூ இன்ஸ்பெக்டர் ஆகவும், ராணிப்பேட்டை மாவட்ட ஏ சி டி யு இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி திருப்பத்தூர் டவுன் இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 அதேபோன்று கே.வி. குப்பம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் நிர்மலா ஆம்பூர் மகளிர் இன்ஸ்பெக்டர் ஆகவும், செய்யாறு மகளிர் இன்ஸ்பெக்டர் லதா திருப்பத்தூர் மாவட்ட மகளிர் இன்ஸ்பெக்டர் ஆகவும், வந்தவாசி மகளிர் இன்ஸ்பெக்டர் லட்சுமி கீழ்பெண்ணாத்தூர் இன்ஸ்பெக்டர் ஆகவும், ராணிப்பேட்டை நக்சலைட் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜாராம் சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் ஆகவும், கீழ்பெண்ணாத்தூர் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி பெரணமல்லூர் இன்ஸ்பெக்டர் ஆகவும், குடியாத்தம் மகளிர் இன்ஸ்பெக்டர் அல்லிராணி போளூர் இன்ஸ்பெக்டர் ஆகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ராஜா திருவண்ணாமலை டவுன் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆகவும், வேலூர் மாவட்ட ஐயூசிஏ டபிள்யூ கவிதா திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டராகவும், காட்பாடி மகளிர் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி திருவண்ணாமலை மகளிர் இன்ஸ்பெக்டராகவும், திருப்பத்தூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டர் பிரபாவதி ஆரணி மகளிர் இன்ஸ்பெக்டராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். .வேலூர் மாவட்ட சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் புனிதா செய்யாறு மகளிர் இன்ஸ்பெக்டர் ஆகவும், வேலூர் மாவட்ட குற்றவாள காப்பகம் இன்ஸ்பெக்டர் நிர்மலா திருவண்ணாமலை ரூரல் மகளிர் இன்ஸ்பெக்டராகவும், ஆரணி மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வந்தவாசி மகளிர் இன்ஸ்பெக்டர் ஆகவும், திருவண்ணாமலை மாவட்ட குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் பேபி திருவண்ணாமலை ஏசி டி யு இன்ஸ்பெக்டர் ஆகவும் அங்கு பணியாற்றிய இலக்குவன் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், அதேபோல காத்திருப்போர் பட்டியலில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் திருவண்ணாமலை போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டராகவும், ரவி வேலூர் மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டராகவும், சண்முகம் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டராகவும், கன்னியப்பன் வேலூர் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகவும், ரமேஷ் ராணிப்பேட்டை போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகவும், பழனி செல்வம் திருப்பத்தூர் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகவும், கோவிந்தசாமி காட்பாடி போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ஆகவும், பாஸ்கர் சத்துவச்சாரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஆகவும், கணேஷ் பாபு திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ஆகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவு வேலூர் சரக டிஐஜி சரோஜ்குமார் தாக்கூர் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வேலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top