தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில் குடமுழுக்குத் திருவிழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது.இதில் தினமும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகி்ன்றனர்.
இக்கோயிலில் குடமுழுக்குத் திருவிழா நேற்று காலை 9.20 மணிக்கு நடைபெற்றது.
இதற்காக கோயில் உள் பிரகாரத்தில் 66 குண்டங்கள் கொண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளதுஇதன் பூர்வாங்க பூஜைகள் கடந்த 16 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேலும் மங்கள வாத்தியம்,வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடைபெற்றது. மேலும் ஆச்சார்ய விஷேச சந்தி, விக்னேஸ்வர பூஜை,புண்யாகவாசனம் ஆகியவற்றுடன் 2 ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.பின்னர் மூல மூர்த்திகள் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும்,மாலையில் ஆச்சார்ய விஷேத சந்தி விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம் பூஜைகளுடன் 3 ஆம் மற்றும் 4 ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காலை பரிவார யாகசாலையில் மகாபூர்ணாஹூதி,
தீபாராதனை முடிந்ததும் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிரதான யாகசாலையில் மஹாபூர்ணாஹூதி, உபச்சாரங்கள் நடைபெற்றது. சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. நேற்று காலை காலை 5 மணிக்கு மங்கள வாத்தியம், 5.30 மணிக்கு வேத பாராயணம், காலை 6 மணிக்கு திருமுறை பாராயணம், 6:30 மணி முதல் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. காலை 8 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், 9.20 மணிக்கு அருள்மிகு கோமதி அம்பிகா சமேத சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயணசாமி விமானம் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகமும், 9.20 மணிக்கும், அருள்மிகு கோமதி அம்பிகா சமேத சங்கரலிங்க சுவாமி மற்றும் சங்கரநாராயணசாமி மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம், மகா தீபாராதனையும் நடைபெற்றது.விழாவில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார், சட்டமன்ற உறுப்பினர் ராஜா, முன்னாள் அமைச்சர் வி.எம் ராஜலட்சுமி, சங்கரன்கோவில் கோட்டாட்சி தலைவர் கவிதா, தாசில்தார் பரமசிவன், சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, ஆணையாளர் சபாநாயகம், அறங்காவலர் குழு தலைவர் சண்முகையா, அறங்காவலர் ராமகிருஷ்ணன், நெல்லை, விருதுநகர் மண்டல மதிமுக இணையதள அணி பொறுப்பாளர் சங்கரசுப்பு, அரிமா சங்க மாவட்ட ஆளுநர் டாக்டர் அய்யாதுரை, செங்குந்தர் அபிவிருத்தி சங்கச் செயலாளர் மாரிமுத்து, பரணி கேட்டரிங் சர்வீஸ் சங்கர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டிருந்தனர்.
