திருப்பூர் மாவட்டம் வளைவான சாலையால் அடிக்கடி ஏற்படும் விபத்து பி.என் ரோடு பூலுவபட்டி பேருந்து நிறுத்தத்தில் இருந்து அம்மன் நகர் மற்றும் வாவிபாளையம் ஊத்துக்குளி வரை செல்லும் சாலை வளைவு நிறைந்த சாலையாக அமைந்துள்ளது அது மட்டும் இன்றி இந்தப் பகுதியில் தனியார் பள்ளிகளும் அரசு மாநகராட்சி பள்ளிகளும்
அதிகமாக உள்ள பகுதி மேலும் தொழிற்சாலைகள்
குடியிருப்பு பகுதிகளும் அதிகமாக உள்ள பகுதியாகும்
குறுகிய சாலை என்பதாலும் வளைவு அதிகமாக உள்ளதாலும் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது வேகமாக வரும் இளைஞர்களால் நாள் ஒன்றுக்கு நான்கு ஐந்து விபத்துகளும் வாரம் ஒன்றிற்கு ஒன்று இரண்டு விபத்து மரணங்களும் ஏற்படுவதால் வளைவான பகுதிகளில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும் பள்ளி வாகன ஓட்டிகளும் நீண்ட நெடிய காலங்களாக நெடுஞ்சாலை துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள் விரைவாக நடவடிக்கை எடுத்து விபத்துக்களை குறைக்க வேண்டும் என்றும் உடனடியாக இது தொடர்பாக அதிக கவனம் நெடுஞ்சாலைத் துறையினர் எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்