கோவை மண்டல கட்டிட பொறியாளர்கள் சங்கம், கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு ஆகியோர் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
கொசீனா தலைவர் பொறியாளர் ராஜதுரை தலைமையில் நடைபெற்ற இதில், கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு மத்திய மாவட்ட தலைவர் அருள்தாஸ் முன்னிலை வகித்தார்..
ஆர்ப்பாட்டத்தில்,கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கட்டுமான துறை சார்ந்த பலர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.
கட்டுமானத்துறையில் பொறியாளர்களின் பணியை வரைமுறைப்படுத்திட பொறியாளர் கவுன்சில் அமைக்க வேண்டும்,
தங்கம், வைரம், பொருட்களுக்கு இறக்குமதி வரியை குறைத்து அறிவித்துள்ள நிலையில், பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும், கட்டுமான துறை சார்ந்த பொருள்களின் ஜிஎஸ்டியை வரியை குறைக்க வேண்டும்,
கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்திட நிரந்தரமாக செயல்படும் விலை நிர்ணயக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது..