பிஎன் ரோடு மும்மூர்த்தி நகர் ஆசிரியர் காலணியில் தொழிற்சாலை மற்றும் பொது சுகாதார மையம்
ஆரம்பப் பள்ளி மேலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ள பகுதியில் ஒரு நாள் ஒன்றிற்கு 70 மேற்பட்ட லாரிகளில் குப்பைகளை கொட்டி மழை போல் குவித்து வைத்துள்ளதால், துர்நாற்றம் அப்பகுதி முழுவதும் பரவி உள்ளது மேலும் மழைத் தொடர்ந்து பெய்து வரும் காரணத்தால் கொசு அதிக அளவில் உற்பத்தி ஆகியுள்ள நிலையில்.டெங்கு மலேரியா போன்ற தொற்றுக்களும் இதனால் பரவிவிடும் என்று அச்சத்தில் பகுதி மக்கள் உள்ளார்கள் துர்நாற்றம் வீசுவதால் வீட்டில் சமையல் கூட செய்ய முடியவில்லை என்று இல்லத்தரசிகள் மிகவும் கவலை தெரிவித்தார்கள்
விரைந்து இந்த குப்பைகளை அகற்றி துர்நாற்றத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளார்கள்
