கோவையில் நட்சத்திர ஹோட்டல்களை மிஞ்சும் மெத்தைகள் தயாரிப்புகள் அவாகோ நிறுவனம் துவக்கம்

sen reporter
0


கோவையில் நட்சத்திர ஹோட்டல்களை மிஞ்சும் மெத்தைகள் தயாரிப்புகள்  அவாகோ நிறுவனம் துவக்கம் திறப்பு விழா சலுகையாக 4999 ரூபாய்க்கு இருவர் படுக்கும் மெத்தைகள் ,தலையணை விற்பனை.மனிதனுக்குஉடலுக்கு ஓய்வு கொடுத்து தூக்கம் என்பது மிக முக்கியம். இதனை கருத்தில் கொண்டுகோவையைதலைமையிடமாக கொண்டுள்ள மை டாடி எனும் தொழில்  நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மக்களுக்கு நிம்மதியான தூக்கத்தை  கொடுக்கும் விதமாக நட்சத்திர ஹோட்டலில் உள்ள மெத்தகளை மிஞ்சும் அளவுக்கு அவாகோ எனும் பிராண்டை உருவாக்கிமெத்தைகள்,தலையணைகளை தயார் செய்து விற்பனைசெய்து வருகின்றனர்.
இந்த நிறுவனம்மூலம்பலருக்கும் வேலைவாய்ப்பைகொடுத்துள்ளது.இத்தகைய சிறப்பு மிக்க அவாகோ தனது கிளையை கோவை  மேட்டுப்பாளையம் ரோடு ஜி.என்.மில் பகுதியில் துவக்கியுள்ளது. இந்த துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி, ஜூவல் ஒன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கே. ஸ்ரீனிவாசன் தொடங்கி வைத்தார்.
இது குறித்து மை டாடி உரிமையாளர் அசோக்குமார் கூறுகையில்,எங்கள்அவாகோ'வில் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள மெத்தைகளை மிஞ்சும் அளவிற்குவாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறுமெத்தைகள்,மற்றும் தலையணை செய்துதருவதோடு  மக்களுக்கு நேரடியாக விற்பனை செய்வதால் எங்கும் இல்லாத அளவில் குறைந்த விலையில் விற்பனை செய்துவருகின்றோம்.

மேலும் திறப்பு விழா சலுகையாக முதல் 100 நபர்களுக்கு  4999 ரூபாய் விலையில் இரண்டு படுக்கை வசதி கொண்ட மெத்தைகள்மற்றும்தலையணைகள் வழங்கப்படுகிறது.மேலும் நடுத்தர மக்களும் பயன்படுத்த கூடிய அளவிலும் மெத்தைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த மெத்தைகள் உடலில் உள்ள சூட்டை குறைத்து குளிர்ச்சியை ஏற்படுத்தி நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும் வகையில் இந்த மெத்தைகள் இருக்கிறது.விரைவில் இந்த மை டாடி நிறுவனம் மூலம் அவாகோ பிராண்டை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்,  என  அவர் தெரிவித்தார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top