கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த பெரிய தள்ளபாடி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 413 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். (11)பதினோராம் வகுப்பு அறிவியல் பாடப் பிரிவில் படிக்கும் மாணவர்கள் சந்தோஷ், மணிகண்டன், வெங்கடேசன், ஆகிய மூவரும் பள்ளி துவங்கும் முன்பு தங்களுடைய வகுப்பறைக்கு வந்து படித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது பள்ளியில் மேற்கூரை பூச்சு கட்டிடமமானது மாணவர்கள் மீது விழுந்ததில் மானவர்களின் தலையில் அடிபட்டு ரத்த காயம் ஏற்பட்டது.உடனே பள்ளி தலைமை ஆசிரியர் காளியப்பன் அவர்கள் காயமடைந்த மூன்று மாணவர்களையும் உடனடியாக சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் சேர்த்தார். இதனை அடுத்து சிகிச்சைக்கு பிறகு அந்த மூன்று மாணவர்களும் வீடு திரும்பினார்கள்.இந்த கட்டிடமானது 2021- 22 முன்னாள் எம்பி டாக்டர்.செல்வகுமார் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ரூ.21. 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும்,இந்த கட்டிடம் இந்த கல்வி ஆண்டு ஜூன் மாதம் முதல் மாணவர்கள் பயன்பாட்டிற்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் மற்றும் கிருஷ்ணகிரி
மாவட்ட ஆட்சியர் அவர்களும் உடனடியாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீதும் மற்றும் தரமற்ற கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர்கள் மீதும் தரமற்ற கட்டிடத்தை சோதனை செய்து அனுமதி வழங்கிய அரசு அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க கோரி கிருஷ்ணகிரி மாவட்டம் இந்திய மக்கள் உரிமை நீதி பொதுநல சங்கம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
.jpg)
.jpg)