தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சி பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி உள்பட 10 பேர் தெரு நாய் கடித்ததில் காயமடைந்தனர். இதில் அருணாசலம்(எ) அருணா (63), பரிசில் பேகம் (76, நாகப்பா (43), அரவிந்த் (26) தீபிகா ஸ்ரீ உள்ளிட்ட 7 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து தலைமை மருத்துவரிடம் காயமடைந்தவர்கள் உயர்தர சிகிச்சை அளிக்கும் படி அறிவுறுத்தினார்.
அப்போது, மாவட்ட திமுக பிரதிநிதி ஸ்டீபன் சத்தியராஜ், நிர்வாகிகள் குமார், ஜவகர்அலி, மோகன்ராஜ், வேல்அய்யப்பன், கரிகாலன், சுபகான், ஜாபர், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
