திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பெருமாநல்லூர் வரை செல்லும் சாலை முழுவதுமாக பல்லாங்குழி போல் அங்கங்கே பள்ளமும் மேடுமாக உள்ளது
இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றார்கள்
மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் பள்ளி வாகனங்களும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றது
கர்ப்பிணி பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்
இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனே சென்று வருகின்றார்கள் வயதான முதியவர்கள் எங்கே குழி இருக்கிறது? எங்கே பள்ளம் இருக்கிறது எங்கே மேடு இருக்கிறது என்று தெரியாமல் நிலை தடுமாறி அவ்வப்போது கீழே விழுந்து விபத்துக்குள்ளாவது அடிக்கடி தொடர்ச்சியாக நடந்து வருகின்றது இதுகுறித்து உடனடியாக மாநகராட்சி நிர்வாகம்
நெடுஞ்சாலையில் துறையினருக்கு சாலையை புதுப்பிக்க வேண்டுகோள் வைக்கும்படி வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் தெரிவித்து வருகின்றார்கள்