கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப.நேரில் சென்று வாழ்த்துக்கள்.
9/10/2024
0
பாரிஸ் நகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்ஸ் 2024 பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முனீஸ்வர் நகரை சேர்ந்த நித்ய ஸ்ரீ சிவன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவரது வீட்டிற்கு நேரில் சென்று சால்வை அணிவித்து, மலர்கொத்து மற்றும் புத்தகம் வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடன், ஓசூர் சார் ஆட்சியர் திருமதி.பிரியங்கா இ.ஆ.ப, மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.ராஜகோபால் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
