ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டு அப்பகுதி காவல் ஆய்வாளரிடம்
நகரச் செயலாளர் மனு கொடுத்ததாக தெரிகிறதுஅதை தொடர்ந்து காவல் ஆய்வாளர் வாய்மொழி உத்தரவாக அனுமதி வழங்கி உள்ளார் ஆகையால் திட்டமிட்டபடி அப்பகுதியில் பெண்கள் ஊர்வலமாக முளைப்பாரி எடுத்துச் சென்றார்கள்
திடீரென அங்கு வந்த காவல் ஆய்வாளர் திரு தாமோதரன் ஊர்வலம் நடத்தக்கூடாது அதற்கு உங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
மேலும் அவர் கூறுகையில் விநாயகர் சதுர்த்தி முடிந்து ஒரு வாரத்திற்கு பிறகு வேண்டுமானால் நீங்கள் ஊர்வலம் எடுத்துச் செல்லுங்கள்
என்று கூறியதால் பெண்கள் பொதுமக்களும் ஆவேசமடைந்தார்கள் அதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து இடையூறும் சலசலப்பு ஏற்பட்டது பிறகு ஒரு வழியாக ஊர்வலம் மெயின் ரோட்டிற்கு வராமல்
குறுக்குச் சாலைகள் வழியாக பக்தர்கள் ஊர்வலமாக சென்றார்கள்மேலும் அப்பகுதி மக்கள் கூறுகயில் ஆய்வாளரின் செயல் கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்கள்
