வேலூரில் கல்லூரி சந்தையை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்!
9/18/2024
0
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கல்லூரி சந்தையை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சி 18ஆம் தேதி முதல் வரும் 20ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
