தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்சங்கம் சார்பாக இன்று மாலை 5 மணி அளவில் மாவட்டம் முழுவதும் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு லோகநாதன் மாவட்ட தலைமை நிலைய செயலாளர் தலைமை தாங்கினார்.இதில் கிராம நிர்வாக அலுவலர்களை டிஜிட்டல் கிராப் சர்வே பணியினை புதிதாக ஆட்கள் நியமித்து பணி செய்ய வேண்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் வட்ட தலைவர் சுரேஷ்பாபு,செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்
