தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையம் 2024-25 ம் ஆண்டு மாண்புமிகு முதலமைச்சர் கோப்பை போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் - மாவட்ட விளையாட்டு அரங்கம், மினி விளையாட்டு அரங்கம் ஒசூர், அரசு மகளிர் (சந்தியா) கலைக்கல்லூரி கிருஷ்ணகிரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி கிருஷ்ணகிரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாகரசம்பட்டி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கிருஷ்ணகிரி, டி.கே. சாமி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கிருஷ்ணகிரி, மற்றும் லட்சுமியம்மாள் மேசைப்பந்து அகாடமி ஒசூர் ஆகிய இடங்களில் கீழ்கண்ட நாட்களில் நடைபெற உள்ளது.
1. பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வருகின்ற 10.09.2024 முதல் 13.09.2024 வரையில் கேரம், சிலம்பம், நீச்சல், ஹேண்பால், கூடைப்பந்து, வாலிபால், செஸ், கால்பந்து, இறகு பந்து, கிரிக்கெட், ஹாக்கி, மேசைபந்து, கோகோ, கபாடி, தடகளம், ஆகிய விளையாட்டுகளும்,
2. கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு வருகின்ற 17.09.2024 முதல் 24.09.2024 வரையில் - கேரம்,சிலம்பம்,நீச்சல்,ஹேர்பால், கூடைப்பந்து, வாலிபால், செஸ்,கால்பந்து, இறகுபந்து, கிரிக்கெட், ஹாக்கி, மேசைபந்து, கபாடி, தடகளம், ஆகிய விளையாட்டுகளும்,
3. பொது மக்களுக்கான போட்டிகள் வருகின்ற 19.09.2024 முதல் 21.09.2024 வரையில் சிலம்பம், வாலிபால், கால்பந்து, கிரிக்கெட், கபாடி, இறகு பந்து, தடகளம், கேரம் ஆகிய விளையாட்டுகளும்,
4. மாற்றுத் திறனாளிகள் பிரிவு போட்டிகள் 23.09.2024 அன்று - தடகளம், இறகு பந்து, வீல்சேர் டேபிள் டென்னிஸ், அடாப்டு வாலிபால், எறிபந்து, கால்ந்து, கபாடி, ஆகிய விளையாட்டுகளும்,
5. அரசு ஊழியர்களுக்கான போட்டிகள் வருகின்ற 24.09.2024 அன்று தடகளம், இறகு பந்து, கபாடி, கேரம், செஸ், வாலிபால் ஆகிய விளையாட்டுகளும் நடைபெறும்.
விதிமுறைகள் :
1. ஒருவர் ஒரு விளையாட்டில் மட்டுமே பங்கேற்க முடியும் - ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்றிருந்தால் அந்த நபரை ஒட்டு மொத்தமாக தகுதி நீக்கம் செய்யப்படும்.
2. பெண்கள் அணிகள் வரும்போது பெண் ஆசிரியை கண்டிப்பாக உடன் வருதல் வேண்டும்.
3. பள்ளி, கல்லூரி பிரிவில் கலந்து கொள்ள வரும் மாணவ/ மாணவிகள் கீழ்கண்ட ஆவணங்கள் போட்டிகள் துவங்கும் முன்பே சமர்பிக்கப்பட வேண்டும் - ஆவணங்கள் கொண்டு வராதவர்களை எக்காரங்களை கொண்டும் போட்டிளில் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டாது.அ) பள்ளி / கல்லூரி புகைப்படத்துடன் கூடிய படிப்பு சான்று அசல் ஆ) ஆதார் கார்டு நகல்
இ) வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ( பெயர்,கணக்க எண் மற்றும் IFSC CODE எண் புகைப்படம் தெளிவாக இருத்தல் வேண்டும் )
3.பிரதி,
பொதுப்பிரிவில் பங்கேற்பவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.
அ) ஆதார் கார்டு நகல்
ஆ) வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கநகல் ( பெயர்,கணக்க எண் மற்றும் IFSC CODE எண் புகைப்படம் தெளிவாக இருத்தல் வேண்டும் )
4.அரசு ஊழியர்கள் பிரிவில் பங்கேற்பவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது பணிபுரிதல் வேண்டும்.
அ) அரசு ஊழியர் அடையாள அட்டைஅல்லது பணிபுரிதல் சான்று அசல் பிரதி சமர்பித்தல் வேண்டும்.
ஆ) ஆதார் கார்டு நகல்
இ) வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கநகல் ( பெயர், கணக்கு எண் மற்றும் IFSC CODE எண் புகைப்படம் தெளிவாக இருத்தல் வேண்டும் )
5.மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிப்பவர்களாக இருத்தல் வேண்டும்
அ) ஆதார் கார்டு நகல்
ஆ) மாற்றுத்திறனாளிகளுக்கான
வேண்டும்.அடையாள அட்டை நகல் சமர்பிக்க
இ) வங்கிகணக்கு புத்தகத்தின் முதல் பக்கநகல் ( பெயர்,கணக்க எண் மற்றும் IFSC CODE எண் புகைப்படம் தெளிவாக இருத்தல் வேண்டும் )
இப்போட்டிகளில் பங்கேற்க இணைய தள பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கெடுக்க அனுமதிக்கப்படும் எனவும் போட்டிளில் பங்கேற்பவர்கள் பெயரில் வங்கி கணக்கு இருத்தல் வேண்டும் பெற்றோர் அல்லது உறவினர்கள் வங்கி கணக்கு ஏற்றுக்கொள்ள இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலக தொலை பேசி எண் 04343 291727, 7401703487, 9751484845, 9865465143, 9443451902, 9715177975, 9384260488, 9677775001, 8220356126, 6379522893 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.
