வேலூர்: காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்
9/12/2024
0
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, காட்பாடி காந்தி நகரில் ஆதிலட்சுமி திருமண மண்டபத்தில் காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் பகுதி அவைத்தலைவர் பிச்சாண்டி தலைமையிலும், பகுதி செயலாளர் வேலூர் மாநகராட்சி துணை மேயருமான எம். சுனில்குமார் வரவேற்புரையில் இந்த பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக காட்பாடி சட்டமன்ற உறுப்பினர், நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் கலந்து கொண்டு இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் திரளான திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
