தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் - திருவேங்கடம் சாலையில் அமைந்துள்ள வீரமாமுனிவர் சித்த மருத்துவமனையில் ஒருங்கிணைந்த உடல் நல சேவை துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமை வகித்தார். பாளையங்கோட்டை முதன்மை குரு குழந்தைராஜ், நெல்லை டி.எஸ்.எஸ். எஸ் இயக்குனர் பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீரமாமுனிவர் சித்த மருத்துவ குழும இயக்குனர் அருள்ராஜ் வரவேற்புரை ஆற்றினார். விழாவினை பாளையங்கோட்டை மறை மாவட்ட செயலக முதல்வர் ஞானப்பிரகாசம் தொடங்கி வைத்தார். விழாவில் களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி, யோகா ஆசிரியர் மருதையா, தென்காசி லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவர் கோயில் பிள்ளை, செயற்குழு உறுப்பினர் சிதம்பரம், அனைத்து கிறிஸ்தவ சபை தலைவர் தம்பி சேவியர் உள்ளிட்ட ஏராளமான வர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு ஆர்.சி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் சித்தா டாக்டர் சந்திரா நன்றி கூறினார்.
நெல்லை: சங்கரன்கோவில் வீரமாமுனிவர் ஒருங்கிணைந்த உடல் சேவை துவக்க விழா
9/12/2024
0
