ஏற்கனவே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்படும் குடிநீரீல் சாக்கடை கலந்துள்ளதாக பொதுமக்கள் புகார் இருந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களிடையே மிகப்பெரிய கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது..
இந்நிலையில் இதுவரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நோய் தடுப்பதற்கான முதற்கட்ட பணிகளை கூட இன்னும் துவங்கவில்லை.பொது மக்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களோ, குடிநீர் தொட்டி சுத்தம் செய்யும் வேலையோ, கொசு மருந்து அடிக்கும் நடவடிக்கையோ, இதுவரை துவங்கப்படவில்லை
இன்னும் பல தெருக்களில் சாக்கடைகளும், மழைநீரும் சீர் செய்யப்படாமல் தேங்கி நின்று நோய் தொற்று ஏற்படும் அபாயம் தான் ஆழ்வார்குறிச்சி பகுதியில் உள்ளது.ஆகையால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு அவசரகால அடிப்படையில் நோய் தடுப்புக்கான குழுவினை அனுப்பி சீர் செய்து பொதுமக்கள் நலன் காத்திடுமாறு... கோரிக்கை விடுத்துள்ளார்
