சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்திருமாவளவன் செய்தியாளர்களுடன் சந்திப்பு:
9/16/2024
0
அமெரிக்கா சென்று முதலீடுகளை ஈர்த்து வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.மேலும், முதலமைச்சரின் அமெரிக்கா பயணத்தில் 19 ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதை வரவேற்கிறேன் என தெரிவித்தார். வருகின்ற அக்டோபர் 2ஆம் தேதி விசிக நடத்தும் மாநாட்டில் இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன் வைக்க உள்ளோம் என கூறியதை தொடர்ந்து டாஸ்மாக் விற்பனை இலக்கை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பது முதல் கோரிக்கையாக வைக்க உள்ளோம் என தெரிவித்தார்.வி.சி.க மது ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உட்பட பல்வேறு தலைவர்கள் கலந்த பங்கேற்க உள்ளனர் என தெரிவித்துள்ளார்.
