கோவை: இந்திய சிலம்பம் சங்கம் SAI ஆண்டு பொதுக்குழு கூட்டம்!!!

sen reporter
0

கோவையில் நடைபெற்ற சிலம்பம் அசோசியேசன் ஆப் இந்தியா சங்கத்தின் பொது குழு கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிலம்பக்கலை ஆசான்கள்,நடுவர்கள்,பயிற்சியாளர்கள்எனபலர்கலந்துகொண்டனர்.சிலம்பம் அசோசியேசன் ஆப் இந்தியா எனும் இந்திய சிலம்ப சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.சங்கத்தின் பொது செயலாளர் தியாகு நாகராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் துணை தலைவர் ராஜா,துணை செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில்,மாவட்ட,மாநில,தேசிய  அளவில் சிலம்பாட்ட போட்டிகளை எவ்வாறு சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசணைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து  வரும் டிசம்பர் மாதம் மாநில அளவிலான சிலம்ப போட்டிகளை திருவள்ளூர் மாவட்டத்தில் நடத்துவது என உறுதி செய்யப்பட்டது.மேலும் தேசிய அளவிலான போட்டிகளை அடுத்த மாநிலங்களில் நடத்துவது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. 

தொடர்ந்து கூட்டத்தில் தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி தலைவராக விருது நகர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன்,செயலாளராக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அர்ஜூன் ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.பொது குழு கூட்டம் குறித்து தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி தலைவர் கூறுகையில்,தமிழக அரசு சார்பாக நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் சிலம்ப போட்டிகளும் நடத்தி வருவதற்கு இந்த நேரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஆகியோருக்கு நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்..

அதே நேரத்தில் இந்த சிலம்பாட்ட போட்டிகளில் பொதுவான நடுவர்களை பயன்படுத்துவதை தவிர்த்து,சிலம்ப கலை தொடர்பான நடுவர்களை பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.தொடர்ந்து நடந்த கூட்டத்தில், சிலம்பாட்ட கலையை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில், சிலம்பம் உள்ளிட்ட  உலக சாதனை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நோபல் உலக சாதனை புத்தகத்தின்   இயக்குனர் ஹேமலதா தமிழக அளவிலான  தங்களது தீர்ப்பாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்..

 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top