தேனி மாவட்டம் கம்பம் போக்குவரத்து கிளை எண்1ன் அவல நிலை!!!
10/08/2024
0
கம்பம் போக்குவரத்து கிளை எண் 1ல் (TN57 2358)உடைய கோம்பைதொழு பேருந்தை சுமார் 32கிராம மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டும், பயனடைந்தும் வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளும், மருத்துவமனை செல்லும் மக்களும் இந்த பேருந்தை தினமும் எதிர்பார்த்து பயணம் செய்கின்றனர். கடந்த ஒரு மாதகாலமாக ஞாயிற்று கிழமை நாட்களில் கோம்பைத்தொழு பேருந்தை டிப்போ அதிகாரிகள் இயக்காமல் தமிழக அரசையும், தமிழக முதல்வரையும்,32கிராம மக்களையும் ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும்,டிப்போ அதிகாரிகளும்,டிராபிக் பார்ப்பவரும் தனியார் முதலைகளிடம் பணம் வாங்கிகொண்டு கோம்பை தொழு அரசு பேருந்தை ஞாயிற்றுகிழமை நாட்களில் நிறுத்திவிட்டு தனியார் பேருந்துக்கு வழிவிடுவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. கோம்பைத்தொழு சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் இந்நாள்வரை தீர்வு காணப்படாததால் கிராமத்து மக்கள் மனவேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசானது கிராமத்து மக்களின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.