விழாவானது 26.10.2024 சனிக்கிழமை அன்று தமிழ்த்தாய் வாழ்த்துடன்,குத்துவிளக்கேற்றிவிழா தொடங்கியது. கல்லூரி செயலாளர் டி.மணிநாதன், கல்லூரி தலைவர் டாக்டர்.த.சிவக்குமார் தலைமையேற்றனர். கல்லூரி முதல்வர்முனைவர்.ஆர்.பானுமதி பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். அத்துடன் இக்கல்வி ஆண்டின் அறிக்கையையும் சமர்ப்பித்தார். சிறப்பு விருந்தினரான, வேலூர் மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர்முனைவர் அ.மலர்
புற அழகாக எத்தனை அலங்கரித்தாலும் அக அழகானகல்வி அழகே சிறப்புடையதும் சமுதாய முன்னேற்றத்திற்கு மாணவியர்களின்கல்விபேருதவியாக இருக்கும் எனவும், வாழ்க்கையில் பல்வேறு உயர்ந்த நிலைகளை அடைவதற்கு
கல்வியே உதவிபுரிகின்றது எனச் சிறப்புரையாற்றினார். துறைப்பேராசிரியர்கள் மாணவிகளின்பெயர் பட்டியலை வாசிக்க மாணவிகள் பட்டம் பெற்றுச்சென்றனர்.இவ்விழாவில் 1137 மாணவிகள் பட்டம் பெற்றனர். கல்லூரியில் 93 மாணவிகள் தரவரிசைக்கான சான்றிதழும், ரூ.2,19,000 பணப்பரிசினையும் மனமகிழ்ச்சியோடு பெற்று, பட்டம் பெற்றதற்கான உறுதி மொழியினை முதல்வர் முன்மொழிய மாணவிகள் வழிமொழிந்தனர்.இந்நிகழ்வில் பல்வேறு துறைகளைச் சார்ந்த துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக
நண்பர்கள், புகைப்படக் கலைஞர்கள், பெற்றோர்கள், மாணவிகள் அனைவரும் கலந்து
கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.முனைவர்.அ.வினோதினிஉதவிப்பேராசிரியர், விலங்கியல்துறைநன்றியுரைவழங்கினார் விலங்கியல் துறை பேராசிரியர்கள்விழாவிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். விழாவிற்கு வருகை தந்தவர்களுக்கு லட்சுமி பிரபா தேநீர் விருந்து அளித்து உபசரித்தார். நாட்டுபண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
