திருவண்ணாமலை: கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டி பரிசு வட்டார கல்வி அலுவலர் பங்கேற்பு!!!
10/28/2024
0
தமிழக அரசு அரசு பள்ளி மாணவ, மாணவியர்களிடையே உள்ள கலைத்திறனை ஊக்குவிக்கும் பொருட்டு வருடந்தோறும் கலைத் திருவிழா போட்டிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில்திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியஅளவில்பெரணமல்லூர், ஆவணியாபுரம், நெடுங்குணம், நமத்தோடு, மடம், கொழப்பலூர், மடம், வல்லம் உள்ளிட்ட எட்டு குறுவள மையங்களில் கலைத்திருவிழா போட்டிகள் கடந்த வாரம் தொடங்கி நடத்தப்பட்டது. இதில் பேச்சுப்போட்டி, நடன போட்டி, மாறுவேடப்போட்டி, வண்ணம் தீட்டுதல், கதை கூறுதல், திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று மேலத்தாங்கல், நெடுங்குணம் உள்ளிட்ட அரசு தொடக்கப் பள்ளிகளில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டு கலைத் திருவிழா போட்டியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் நெடுங்குணம் தொடக்கப் பள்ளியில் புறநானூறு பாடலை இணை இயக்குனர் முன்பு பாடிய நான்காம் வகுப்பு மாணவி தருணிகாவிற்கு வட்டார கல்வி அலுவலர் குணசேகரன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் காளிமுத்து, உதவி ஆசிரியை அலமேலு, சரஸ்வதி தற்காலிக ஆசிரியை தமிழரசி, புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர் செந்தமிழ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
