திருப்பூர். அழகு வள்ளி கும்மி குழுவின் கும்மியாட்டத்துடன் துவங்கியது. வனம் செயலாளர் திரு.ஸ்கை.வே.சுந்தரராஜ்* தவம் இயற்றினார், வனம் இலக்கியத்துறை இயக்குநர், ஞானபாரதி திரு.வெ.அனந்தகிருஷ்ணன்* அவர்கள் வரவேற்புரை வழங்கினார். வணிக மேலாண்மை நிபுணர், திரு.P.ரங்கசாமிஅவர்கள் டாடா குழுமத்தில் பணியாற்றிய தமது அனுபவம் குறித்து தலைமையுரையாற்றினார். Rain Beaver - நிறுவனர், திரு.நித்தீஸ் கணேஷ்அவர்கள் செயற்பாட்டாளராக கலந்துகொண்டு மழை நீர் சேமிப்பு முறைகள் மற்றும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வுரையாற்றினார். இயற்கை விவசாயிகள், தெக்கலூர் திருமதி.சித்ரா மற்றும் இச்சிப்பட்டி திரு.ர.ஜீவானந்தம் அவர்களுக்கு வனம் அமைப்பின் ‘நம்மாழ்வார் விருது’ வழங்கி, ராம்ராஜ் காட்டன் நிறுவனம் சார்பில் பரிசு கூப்பன் மற்றும் மீன் அமிலம் இயற்கை உரம் பரிசாக வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
கூட்டத்தில்கலந்துகொண்டவர்களுக்கு, பல்லடம் ராம் நெய் நிறுவனம் மற்றும் தங்கலட்சுமி ஜுவல்லரி சார்பில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட்டன. வனம் பொருளாளர்திரு.R.விஸ்வநாதன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இணைசெயலாளர் திரு.K.M.ஈஸ்வரமூர்த்தி அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்ச்சியில், வனம் தலைவர் திரு.K.சின்னசாமி நிர்வாகிகள், அறங்காவலர்கள், இயக்குநர்கள், தன்னார்வலர்கள், விவசாய பெருமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.நன்றிTMS, பழனிச்சாமி அவர்கள்

