சென்னை: அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாண்புமிகு வனத்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்கள் எழுதிய திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்" நூல் வெளியீட்டு விழா!!
10/25/2024
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாண்புமிகு வனத்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய "The Dravidian Movement and the Black Movement" நூலின் தமிழாக்கமான "திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்" நூல் வெளியீட்டு விழாவில், நூலினை வெளியிட, அந்நூலின் முதல் பிரதியை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் திரு. கி. வீரமணி அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், நூலாசிரியர் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் முனைவர் க. பொன்முடி, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற இந்நாள் முன்னாள் உறுப்பினர்கள், நூல் மொழிபெயர்ப்பாளர் திரு. அசதா, பதிப்பாளர் திரு. சுபகுணராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
