வேலூர் மாவட்டம், சலவன்பேட்டை கச்சேரி தெருவைச் சேர்ந்த மோகன் வயது (30) என்பவரை புடவை மற்றும் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்த பாசக்கார தம்பி பாஸ்கர் வயது (25) கைது செய்யப்பட்டார். வேலைக்கு செல்லாத அண்ணன் மோகன் மதுபோதையில் வந்து எப்போதும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இன்றும் மதுபோதையில் வந்து தாய் மற்றும் மனைவியை தாக்கியுள்ளார். இதனை தடுக்க சென்ற தம்பி பாஸ்கரை கத்தியால் குத்த வந்துள்ளார் மோகன். தடுத்து ஆத்திரமடைந்த பாஸ்கர் அங்கு இருந்த புடவை மற்றும் கயிற்றால் மோகனின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
பாஸ்கரை கைது செய்த வேலூர் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.M.Sc பட்டப் படிப்பை முடித்துள்ளார் தற்போது கைதான பாஸ்கர் பெங்களூருவிலுள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வீட்டிலிருந்தவாறு வேலை செய்து வருகிறார்.தற்போது அண்ணனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்படு நீதிபதியின் உத்தரவின் பேரில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.