வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 4, 42வார்டு, வசந்தபுரம் பகுதியில் உள்ள நிக்கல்சன் கால்வாயை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு!!!
10/10/2024
0
வேலூர் மாவட்டம், வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 4, 42வார்டு, வசந்தபுரம் பகுதியில் உள்ள நிக்கல்சன் கால்வாயை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்து, கால்வாயில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை அகற்ற உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ஜானகி, மாநகர நல அலுவலர் மரு. கணேஷ், வட்டாட்சியர் முரளிதரன், தூய்மைப்பணி அலுவலர்கள் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.