தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையேயான மாநில அளவிலான முதலமைச்சர்க் கோப்பை குத்துச்சண்டைப் போட்டி 10.10.2024 முதல் 17.10.2024 வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான இடையே போட்டிகள் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது. கல்லூரி அளவிலான போட்டியில் பங்குப்பெற்ற ஓசூர் அதியமான் கல்லூரியை சேர்ந்த மு.திருவேந்தன் என்ற மாணவன் வெண்கலப் பதக்கமும், பள்ளி அளவிலானப் போட்டியில் பங்குப்பெற்ற தி விஜய் மில்லிணியம் பள்ளியை சேர்ந்த வி.எஸ்.ரக்சையாஸ்ரீ என்ற மாணவி வெண்கலப் பதக்கம் வென்றார்கள். இவ்விறு மாணவர்களுக்கும் தலா ரூ.50,000 பரிசுத்தொகை பெற்றார்கள்.மேலும், சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்குஇடையேயான அளவிலானகுத்துச்சண்டைப் போட்டி ஹரியானா மாநிலத்தில் 16.10.2024 முதல் 20.10.2024 வரை நடைப்பெற்றது. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள வீரர், வீரங்கனைகள் பங்குப்பெற்றன. கிருஷ்ணகிரியில் உள்ள தி விஜய் மில்லிணியம் பள்ளிச் சார்பாக மூன்று மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டனர். அப்பள்ளியை சேர்ந்த எம்.பி.சௌமிகா என்ற மாணவி வெள்ளிப் பதக்கமும், வி.எஸ்.ஏக்சையாஸ்ரீ என்ற மாணவி வெண்கலப் பதக்கமும், எ.பி.கௌத்தம் என்ற மாணவன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார்கள். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார்.இந்நிகழச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.ராஜகோபால் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப.வாழ்த்து!!!!
10/23/2024
0
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாநில அளவிலான முதலமைச்சர்க் கோப்பை விளையாட்டு போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டிகளில் வெற்றிப்பெற்று பதக்கங்களை வென்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்களிடம் இன்று பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
