வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு!!!
10/04/2024
0
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும்ய மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மண்டல மருத்துவ அலுவலர் இன்பரசு, தலைமை செவிலியர்கள் ஹேமா, பொன்னி மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து மருந்தகத்தில் மற்றும் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.