வேலூர்:பூதூர் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் 4000 பனை விதைகள் நடும் பணி!!!
10/04/2024
0
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, வேலூர் வட்டம், பூதூர் ஊராட்சி, ஏரி கரை பகுதிகளில் பனை விதைகள் நடும் பணி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. பசுமையான நாட்டை உருவாக்கும் விதத்தில் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு தாசில்தார் வேண்டா, வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட், கௌரி, மாவட்ட கவுன்சிலர் த.பாபு, துணை கவுன்சிலர் மகேஸ்வரிகாசி, ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமாரி கண்ணன், துணை இயக்குனர் தோட்டக்கலை துறை சஜினாபானு, பூதூர் ஊராட்சி கவுன்சிலர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஆண்டிஏரி மற்றும் பெரிய ஏரி கரை பகுதிகளில் 4000 பனை விதை நடும் பணியை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயபாலன், வார்டு உறுப்பினர்கள் கே.சக்தி, பத்மா வேலு, தனலட்சுமி பிரேம்குமார், வருவாய் ஆய்வாளர் ரஞ்சனி, வி.ஏ.ஓ தங்கமுத்து, ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் மற்றும் பொதுமக்கள் என பலர் பனை விதை நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.