வேலூர்: இரயில்வே துறை சார்ந்த பணிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம்!!!!
10/18/2024
0
வேலூர் மாவட்டத்தில் உள்ள இரயில்வே துறை சார்ந்த பணிகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில், வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, மாநகராட்சி ஆணையர் ஜானகி, மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்தையன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
