வேலூர்: விரிஞ்சிபுரம் ஊராட்சி ஏரியில் பனை விதை நடும் விழா!!!
10/18/2024
0
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், விரிஞ்சிபுரம் ஊராட்சி ஏரியில் பணை விதைகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்து, பணை விதைகள் நடும் பணியை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைதிட்டஇயக்குநர்செந்தில்குமரன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர்பாலசுப்பிரமணியன், உதவி ஆணையாளர் (கலால்) முருகன். அணைக்கட்டு வட்டாட்சியர் வேண்டா. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜலக்ஷ்மி, பாரி, துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
