கோவையில் நடைபெறும் கீரை மற்றும் மருத்துவ மூலிகைகள் கண்காட்சி!!!

sen reporter
0


 கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் அடுத்த NGGO காலணியில் உள்ள கிருஷ்ணா கல்யாணம் மண்டபத்தில் KEERAIKADAI.COM எனும் அமைப்பினர் நடத்தும் கீரை மற்றும் மருத்துவ மூலிகைகள் கண்காட்சி இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 250 வகை கீரை மற்றும் மருத்துவ மூலிகைகள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றின் மருத்துவ குணங்கள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி கல்லூரி மாணவ மாணவிகள் கீரைகள் குறித்தும் அவற்றின் மருத்துவ பலன்கள் குறித்தும் பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கின்றனர். இந்த கண்காட்சியில் நாம் பெரும்பாலும் உணவில் எடுத்துக் கொள்ளும் கீரைகள் உட்பட பல்வேறு கீரைகள் மூலிகைச் செடிகள் விஷம் முறிக்கும் மூலிகை செடிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சிக்கு பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசமாகும். க்யூ ஆர் கோட் மூலமும் பதிவு செய்து கொள்ளலாம். மேலும்  பெரும்பாலான பள்ளிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதால் பள்ளி மாணவர்களும் வருகை புரிந்து கீரைகள் மற்றும் மூலிகை செடிகள் குறித்து அறிந்து கொள்கின்றனர். 

இதுகுறித்து பேசிய KEERAIKADAI.COM நிறுவனர், ஸ்ரீராம் பிரசாத் பொதுமக்கள் கீரைகள் மற்றும் மூலிகை செடிகள் குறித்து அறிந்து கொள்ளவே இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தார்.  ஒரு காலத்தில் 500 வகையான கீரைகள் மூலிகை செடிகளை உட்கொண்டு வந்த நிலையில் தற்போது பெரும்பாலானோர் அதனை மறந்து விட்டதாக தெரிவித்த அவர் இது குறித்து பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கண்காட்சியை நடத்துவதாக கூறினார். இது போன்ற கண்காட்சியை சென்னையில் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் அதில் 500க்கும் மேற்பட்ட கீரை மற்றும் மூலிகை செடிகளை காட்சிப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார். பொதுமக்கள் தங்களிடம் கீரை மற்றும் மூலிகைச் செடிகளை வாங்க விரும்பினால் எங்களது KEERAIKADAI.COM இணையதளத்தின் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தங்களிடம் இருக்கும் கீரைகள் இயற்கை விவசாயம் சார்ந்த தயாரிக்கப்படுவதாகவும் பூச்சி கொல்லி மருந்துகள் எதுவும் சேர்க்கப்படாமல் உப்பு மஞ்சள் தூள் மிளகு ஆகியவற்றையே கொண்டே பூச்சி கொல்லிகளாக பயன்படுத்துவதாக தெரிவித்தார். தற்பொழுது உள்ள இந்த கண்காட்சியில் பெரும்பாலானவை காட்சி பொருள்களாகவே மாறிவிட்டதாக தெரிவித்த அவர் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக தெரிவித்தார்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top