மலை போல் குவியும் குப்பை, துர்நாற்றத்தால் மக்கள் அவதிருப்பூர் மேட்டுப்பாளையம் காமராஜர் வீதியில்மலைபோல் குப்பைகளை இரவு நேரங்களில் உணவாக கழிவு குப்பைகளும் இறைச்சிக் கடைகளின் கழிவு
மற்றும் பல்வேறு குப்பைகளும் கொட்டப்பட்டு மலை போல் காட்சியளிக்கிறது துர்நாற்றம் வீசி வீடுகளில் வசிக்க முடியாத நிலையில் பொதுமக்கள் திணறி வருகின்றார்கள் சுகாதார நிலையத்திற்கு பின்புறமே சுகாதாரக் கேடு தரும் குப்பைகளை தொடர்ந்து கொட்டி வருவதால் நிச்சயமாக பல்வேறு நோய்த்தொற்றும் அபாயம் உள்ளது என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றார்கள் இந்தப் பகுதியில் குப்பைகளை கொட்டாமல் இருக்க நிரந்தர ஒரு தீர்வு காண வேண்டுமென்று பொதுமக்களும் தன்னார்வலர்களும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்