இராமநாதபுரம்:மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்!!!
10/30/2024
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 117-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்வின் போது, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. இ. பெரியசாமி, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. கே.ஆர். பெரியகருப்பன், மாண்புமிகு சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி. பி. கீதா ஜீவன், மாண்புமிகு பால்வளம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கே. நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. காதர்பாட்சா முத்துராமலிங்கம், திரு. செ. முருகேசன்,திரு. இராம. கருமாணிக்கம் உள்ளிட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன் இ.ஆ.ப., இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சிம்ரன்ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
