2022-23 ஆம் ஆண்டிற்கான தொழில்துறையின் சமீபத்திய வருடாந்திர கணக்கெடுப்பு (ASI) புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி, வருவாய் ஆண்டு 2021-22-ஐ விட, இந்தியாவில் தொழில்துறை துறையானது 2022-23 நிதியாண்டில் தற்போதைய மதிப்பில் 7.3% கூட்டப்பட்ட மொத்த மதிப்பு (Gross Value Added) வளர்ந்துள்ளது.
பி.வி.ஆர். சுப்பிரமணியம், NITI ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரியின் கூற்றுப்படி, இந்தியாவின் தொழில்துறை வேகமாக வளர்ந்து வருவதாகவும், 2022-23 நிதியாண்டில் சுமார் 22 லட்சம் வேலைவாய்ப்புகளைச் சேர்த்துள்ளதாகவும், இது கடந்த 12 ஆண்டுகளில் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும் என்று கூறியுள்ளார்.ASI ஆய்வின்படி, அடிப்படை உலோகங்கள், கோக் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்கள், உணவுப் பொருட்கள், இரசாயன மற்றும் இரசாயனப் பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் உற்பத்தி போன்ற தொழில்கள், தொழில் துறை வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாகஇருந்திருக்கின்றன. 2021-22 ஆண்டுடன் உடன் ஒப்பிடுகையில், 58% தொழில்துறையின் பங்களிப்பானது மொத்த உற்பத்தி வளர்ச்சியில் 24.5% ஆகவும், மற்றும் GVA வளர்ச்சியில் 2.6% பங்களித்தன.
2022-23 ஆம் ஆண்டில் இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள நபர்களின் எண்ணிக்கை, கொரோனா தொற்று நோய்க்கு முந்தைய அதாவது 2018-19 ஆம் ஆண்டின் எண்ணிக்கையைவிட, விட 22.14 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. இதேபோல், சராசரியான ஊதிய விகிதங்களும்முந்தையஆண்டைவிடஅதிகரித்திருப்பதாகபதிவு செய்துள்ளன, மேலும் இந்தத் துறையில்ஈடுபடும்நபர்களுக்கான சராசரி ஊதியம் 2021-22 ஐ விட, 2022-23 இல் 6.3% உயர்ந்துள்ளது.முதல் ஐந்து மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவை 2022-23 இல் நாட்டின் மொத்த உற்பத்தியில் (GVA) 54% மற்றும் மொத்த உற்பத்தி வேலைவாய்ப்பில் 55% ஆக பங்களித்துள்ளன. ஒரு நபரின் சராசரி சம்பளம் 2021-22-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2022-23 இல் 6.3% அதிகரித்து ரூ.3.46 லட்சத்தை எட்டியுள்ளது.
2022-23 ஆம் ஆண்டில் மொத்த நிலையான மூலதன உருவாக்கம் விகிதம் 77% அதிகரித்து ரூ.5.85 லட்சம் கோடியாக உயர்ந்ததையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. நிகர மூலதன உருவாக்கமும் 781.6% ஆக உயர்ந்து, ரூ.2.68 லட்சம் கோடியை எட்டியுள்ளது, இது நிலையான உற்பத்தி வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது.
எனவே, 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறத் தயாராகி வருகிறது, என்பதை சமீபத்திய SDG இலக்கு எண்.9 தெளிவாகக் காட்டுகின்றன. தொழில் புத்தாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி எண் 12, இதன் மூலம் விக்சித் பாரத் 2047 இலக்கை அடைய முடியும் என்று நம்பப்படுகிறது.
