வேலூரில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் ஆட்சியரிடம் குவிந்த கோரிக்கை மனுக்கள்!!!
10/23/2024
0
வேலூர் மாவட்ட சமூக நலன் மகளிர் உரிமை துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமை வகித்தார். திருநங்கைகள் படித்தாலும் உரிய வேலை கிடைப்பதில்லை என்பதால் மற்றவர்கள் படிக்கவே தயக்கம் காண்பிக்கின்றனர் என்று நடந்த சிறப்பு முகாமில் வேதனையுடன் தெரிவித்தனர். இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதிபட தெரிவித்துள்ளார்.
