வேலூர் தாலுகா காவல் நிலையத்தை கைவிலங்கால் பூட்டியதால் திடீர் பரபரப்பு!!!
10/23/2024
0
வேலூர் மாவட்டம், கணியம்பாடியில் வேலூர் தாலுகா காவல் நிலையம் கிராமிய காவல் நிலையமாக செயல்பட்டு கொண்டுள்ளது. இந்த காவல் நிலையத்திற்கு இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. இந்த காவல் நிலையத்தில் வேலூர் தாலுகா காவல் துறையினர் வாகன சோதனையின் போது ஆவணங்கள் இன்றி சென்ற வாகனங்களை கையகப்படுத்தி வருகின்றனர். பல வாகனங்கள் மது போதையில் சிக்கிய வாகனங்கள், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் என பலதரப்பட்ட வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இங்கு நிறுத்தி வைத்துள்ளனர். இந்த காவல் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கதவுக்கு பூட்டு போடாமல் பூட்டுக்கு பதிலாக காவல்துறையினர் கைதிகளுக்கு கையில் போடப்படும் கை விலங்குகளை பயன்படுத்தி பூட்டு போட்டுள்ளனர். காவல் நிலையத்திற்கு ஒரு பூட்டு கூட வாங்க வழியின்றி இந்த கதவுக்கு பூட்டுக்கு பதிலாக காவல் துறையினர் கைதிகளுக்கு போடப்படும் கைவிலங்கை பயன்படுத்தி பூட்டு போட்டுள்ளனர். காவல் நிலையத்திற்கு ஒரு பூட்டு கூட வாங்காமல் கைதிகளுக்கான கைவிலங்கையே பூட்டாக பயன்படுத்தி இருப்பது அந்த வழியாகச் செல்லும் பொது மக்களிடைய பெரும் பேசும் பொருளாக மாறி உள்ளது. ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் நான்கிலிருந்து ஐந்து கை விலங்கு கொடுக்கப்படும் .அதை கைதிகளுக்கு போடாமல் காவல் நிலைய வளாகத்தில் உள்ள நுழைவு கதவிற்கு போடப்பட்டுள்ளது. அப்பொழுது கைதிகளை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது கைவிலங்கு இல்லாமல் அழைத்துச் செல்கிறார்களா? என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக இது ஒரு கேள்விக்குறியாகவே மாறி உள்ளது. மேலும் வேலூரில் பூட்டுக்கு பஞ்சமா? என பொதுமக்கள் இடையே ஒரு பேச்சு அடிபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த அதிகார துஷ்₹பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜூவால் இதற்கு நடவடிக்கை எடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். குறிப்பாக எந்த பணிக்காக இந்த கை விலங்கு கொடுக்கப்பட்டதோ அதற்கு பயன்படுத்தாமல் முறைகேடாக பயன்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்றும் ஒரு கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த காவல் நிலையத்தின் ஆய்வாளராக உள்ள சுபா மிகவும் தெனாவெட்டாகவும் தான்தோன்றித்தனமாகவும் செயல்படுவது இதிலிருந்து தெரிய வருகிறது என்கின்றனர் நன்கு விவரம் அறிந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள். ஆக மொத்தத்தில் இந்த கைவிலங்கை கதவுக்கு பயன்படுத்தியவர்களும் அதே போன்று இதை பயன்படுத்தியதை கூட கவனிக்காமல் பணியாற்றி வரும் அலட்சியமாகவும், தெனாவெட்டாகவும் உள்ள காவல் ஆய்வாளர் சுபா மீது கடும் நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டும் என்று அனைவரும்எதிர்பார்க்கின்றனர். ஆக மொத்தத்தில் காவல் ஆய்வாளர் சுபா மீது நடவடிக்கை பாயுமா ?என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
