அகவிலைப்படி உயர்வு வழங்கிய முதலமைச்சருக்கு உள்ளாட்சி நிதித் தணிக்கை ஊழியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கை ஊழியர் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் வ.மாரிமுத்து, துணைத் தலைவர் ஆர்.பாபு மற்றும் சேலம் மண்டலத் தலைவர் வெ.சுரேஷ் ஆகியோர் நேரில் சந்தித்து,
1. அரசு அலுவலர் - ஆசிரியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கியமைக்கும்,
2. பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25,00,000/- ஆக உயர்த்தியமைக்கும்
3.மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியரின் பெற்றோரையும் பயனாளிகளாக இணைத்தமைக்கும்,
4. அரசு அலுவலர் குறை கேட்பு கூட்டம் நடத்திட ஆணையிட்டமைக்கும்,
5. தீபாவளிப் பண்டிகைக்கு அடுத்த நாளை விடுமுறை நாளாக அறிவித்தமைக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இச்சந்திப்பின்போது உடனிருந்த அரசு தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் நிதித்துறை முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
