கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இ.பி.ஜி. சமூக நவீனமைப்பு மாநாடு நடைபெறஉள்ளது!!!

sen reporter
0


 கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாணவர்களையும், நிபுணர்களையும் ஒன்றிணைத்து சமூக சவால்களை எதிர்கொள்ளும் மாற்றத்தை உருவாக்கும் விதமாக இ.பி.ஜி., சமூக நவீனமைப்பு மாநாடு நடைபெற உள்ளது.

வரும் அக்டோபர் 26 ஆம் தேதி இ.பி.ஜி.,சமூக நவீனமைப்பு மாநாடு கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.இந்த மாநாடு குறித்து இ.பி.ஜி., அறக்கட்டளையின் தலைவர் முனைவர் பாலகுருசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,இந்த மாநாட்டில் பெண்கள் இன்று சமுதாயத்தில் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. சிறந்த பேச்சாளர்கள் பங்குபெறும் மாநாட்டில், நவீனமயமாக்கள் , விவாதம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை மூலம் பெண்கள் எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் சிந்தனை தலைவர்கள் அனைவருக்கும், பெண்களை அதிகாரமூட்டுவதற்கான தீர்வுகளை உருவாக்க ஒன்றிணைந்து வேலை செய்வதற்கான தனித்துவமான வாய்ப்பை இம்மாநாடு வழங்கும் என தெரிவித்தார்.மேலும் இம்மாநாட்டில் பெண்களை அதிகாரமூட்டல் மற்றும் சமூகம் வளரும் என்ற தலைப்பில் மாணவர்கள் சமர்ப்பிக்கும் தீர்வுகளுக்கு முதல் பரிசாக 25,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 15,000,ரூபாயும் மூன்றாம் பரிசாக 10,000 ரூபாய் என ரொக்கப்பரிசாக வழங்கப்படுகிறது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top