எண்டோமெட்ரியோசிஸ் வியாதி உடைய பெண்களுக்கு கருப்பையின் உள்பகுதியில் இருக்கும் திசு போன்ற ஒன்று அதன் வெளியேவும் வளரும். இதனால் அவர்களின் இடுப்பெலும்பு உள்ள பெல்விஸ் பகுதியில் மிக கடுமையான வலியை ஏற்படுத்தும். இதன் காரணமாக அவர்கள் பிரசவம் அடைவது சவாலான ஒன்றாக மாறும். உலகில் 15 முதல் 49 வயதுக்குள் உள்ள 10-15% பெண்கள் இந்த வியாதியால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கருவுறாமையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் மத்தியில் இந்த வியாதி 30-50% அதிகம் இருக்க வாய்ப்புகள் உள்ளது.எண்டோமெட்ரியோசிஸ் வியாதி உடையோர்க்கு தரமான சிகிச்சையை வழங்கும் நோக்கில் இந்த கிளினிக்கை துவக்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த புதிய கிளினிக் நோயாளிகளின் சவுகரியத்தை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதுஅதிநவின தொழில்நுட்பம் எண்டோமெட்ரியோசிஸால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு விரிவான சிகிச்சை அளிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த கிளினிக்கை துவக்கி உள்ளோம் என ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.சி.பழனிவேலு கூறினார் மகளிர் மருத்துவ நிபுணர்கள், அறுவைசிகிச்சை இரைப்பைக் குடலியல் நிபுணர்கள், சிறுநீரக மருத்துவர், மயக்க மருந்து நிபுணர்கள், வலி நிபுணர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் நிபுணத்துவத்தை ஒருங்கிணைத்து, நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கான பல்துறை அணுகுமுறையை இந்த கிளினிக் வழங்கும் என இந்த கிளினிக்கைப் பற்றிப் பேசுகையில், ஜெம் மருத்துவமனையின் எண்டோகைனகாலஜி துறைத் தலைவர் டாக்டர் கவிதா யோகினி தெரிவித்தார்.
கோவை ஜெம் மருத்துவமனையில் பிரத்யேகமான எண்டோமெட்ரியோசிஸ் மையம் துவக்கம்!!!
10/22/2024
0
பெண்கள் எதிர்கொள்ளும் எண்டோமெட்ரியோசிஸ் எனும் கருப்பை அகப்படல நோய்க்கு விரிவான சிகிச்சையை வழங்குவதற்காக கோவை ராமநாதபுரத்தில் செயல்படும் பிரபல ஜெம் மருத்துவமனை சார்பில் எண்டோமெட்ரியோசிஸ் கிளினிக் துவங்கப்பட்டது.இந்த கிளினிக்கை, அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் வி.பாரதி ஹரிசங்கர் மற்றும் கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சுவேதா சுமன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் C. பழனிவேலு, தலைமை செயல் அதிகாரி டாக்டர் P. பிரவீன் ராஜ் மற்றும் எண்டோகைனகாலஜி துறை தலைவர் டாக்டர் கவிதா யோகினி முன்னிலையில் துவக்கி வைத்தனர்.

