இந்நிலையில் இம்மானுவேல் சேகரனார் நூற்றாண்டு பிறந்த நாள் விழா தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் சார்பாக கோவை இரயி்ல் நிலையம் அருகில் உள்ள அண்ணாமலை ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த
மணிமாறன்,சுந்தர்ராஜ்,சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளர்களாக,
குறிச்சிமணிமாறன்,அசோக், ராதாகிருஷ்ணன், லதா ராஜேந்திரன்,உலக நாதன்,புலிய குளம் விமல்,ரவி,பேச்சி முத்து,கலந்துகொண்டனர்.முன்னதாக,தியாகி இம்மானுவேல் சேகரனாரின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர்.தொடர்ந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாய முன்னேற்றத்திற்காக தங்களது பங்களிப்பை வழங்கி வரும் சமூக களப்பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது..