திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் நகராட்சி அலுவலகம் எதிரில் தமிழகத்தில் சமீபத்தில் உயர்த்தப்பட்ட வரி உயர்வை திரும்ப பெறக் கோரி தொகுதி அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. மனித சங்கிலி போராட்டத்திற்கு நகர செயலாளர் கே.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மனித சங்கிலி போராட்டத்தை முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் மனித சங்கிலி போராட்ட கோஷங்களை முழக்கினார். மனித சங்கிலி போராட்டத்தில் நகரவை தலைவர் ஏ.ஜனார்த்தனன், ஒன்றிய செயலாளர்கள் எம்.மகேந்திரன்எம்.அரங்கநாதன் வே.குணசீலன், சி.துரை, எஸ்.திருமூலன், வயலூர் ராமநாதன், மாவட்ட நிர்வாகிகள் விமலா மகேந்திரன், டி.பி.துரை, ஏ.அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், ஜி.கோபால், ஜி. கோவிந்தராஜ், என்.ரகு, ராணி, சுபாஷினி,
ஆர்.கே.மெய்யப்பன் எம்.முனுசாமி, கா.புவனேந்திரன், ரமேஷ், பாலன், பி.அருண், அரவிந்தன், ஜெ பேரவை செயலாளர்கள் பெருமாள், சிவா, அவைத் தலைவர்கள் செபாஸ்டின் துரை, சேகர், தணிகாசலம், சுரேஷ்குமார், எழிலரசன், இளையராஜா, சுதாகர், பிரகாஷ், மகாதேவன், அபிராமி சுரேஷ், பாலாஜி, ரவி, ராஜ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.