சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 11 அக்டோபர் 2024 முன்னிட்டு இடைவிடாது அதே நிலையில் யோகாசனம் 11 நிமிடங்கள் 10 வினாடிகள் செய்து பெண் குழந்தை பாதுகாப்பு சம்பந்தமாக உறுதிமொழி ஏற்று ஆன்லைனில் இன்டர்நேஷனல் பிரைடு புக்ஸ் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தில் உலக சாதனை செய்து உலக சாதனை சான்றிதழ் மற்றும் பதக்கம் கேடயம் சிறப்பாக யோகா செய்த குழந்தைகளை கௌரவிக்கும் விதமாக வழங்கப்பட்டது .இந்த நிகழ்வில் சமூக சேவகர் பா குமார் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ் சுரேஷ் மற்றும் சமூக ஆர்வலர் கா. சிவக்குமார் மற்றும் து. ஸ்ரீனிவாசன் சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தனர். சாய் தன்யா , திர்லாக்சிங் - வேதாந்தா அகாடமி பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் பூஜா ஸ்ரீ , ரித்விக் - ஏவிபி கல்வி அறக்கட்டளை சார்ந்த மாணவர்கள் மற்றும் அஸ்வத் - கிட்ஸ் கிளப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் . இந்த ஐந்து மாணவர்கள் சிறப்பாக யோகா தொடர்ச்சியாக 11 நிமிடம் பத்து வினாடிகள் ஒரே யோகாசன நிலையில் அமர்ந்து பெண் குழந்தை பாதுகாப்பு சம்பந்தமாக உறுதிமொழி எடுத்து உலக சாதனை செய்து இன்டர்நேஷனல் பிரைட் புக்ஸ் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தில் இடம் பெற்று இருக்கிறார்கள் . மேலும் இன்டர்நேஷனல் பிரைடு புக்ஸ் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனர் கிராண்ட் மாஸ்டர். அம்பாசிடர் .டாக்டர் .பிரதீப் சந்திர தாஸ் அவர்கள் உலக சாதனை சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
