திருவண்ணாமலை: செய்யாறு அருகே வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்!!!
10/13/2024
0
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் மேற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் ஆலந்தாங்கல் கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் நடைபெற்றது. வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் வயலூர் வி.ராமநாதன் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளரும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான முக்கூர் என்.சுப்ரமணியன், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஜாகிர் உசேன் ஆகியோர் கலந்துகொண்டு அதிமுக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் திருமூலன், எம்.மகேந்திரன், மாவட்ட துணை செயலாளர் டி.பி.துரை,மாவட்ட பொருளாளர் ஆலத்தூர் சுப்புராயன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ராணி பெருமாள், ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ரகு, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் முனுசாமி, மாணவரணி மாவட்ட செயலாளர் அரவிந்த், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்கள் பெருகடூர் சிவா, பெருமாள், ஒன்றிய மாணவரணி செயலாளர் முருகன், தூளி தவமணி, தூசி ஊராட்சி மன்ற தலைவர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய கிராமங்களில் இருந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50 பேர் மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் அதிமுகவில் இணைந்தனர். பட விளக்கம்: செய்யாறு அடுத்த ஆழந்தாங்கல் கிராமத்தில் வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் பேசினார் உடன் மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன், மாவட்ட பொறுப்பாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஒன்றிய செயலாளர் வயலூர் வி.ராமநாதன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
