ஃபயர் பேர்டு கல்லூரியின் அறங்காவலர்கள் தலைவர் சுந்தர்ராமன்,மற்றும் சுஜனா அபிராமி சுந்தரராமன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில்,எஸ்.வி.அழகப்பன், எஸ்.வி.ஆறுமுகம்,டாக்டர் நந்தகோபால்,டாக்டர் சீனிவாசராவ் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.விழாவில் சிறப்பு விருந்தினராக மலேசிய நாட்டின் மல்டி மீடியா பல்கலை கழகத்தின் தலைவர் தலைமை செயல் அதிகாரி டாக்டர் டத்தோ மழிஹம் மஹசூத் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டுமாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய முக்கிய விருந்தினர்கள் மனித வள மேலாண்மையில் PGDM, கல்வி சிறந்ததிறமைகளைஈர்ப்பதற்கும்மேம்படுத்துவதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்கும், உதவுவதாக தெரிவித்தனர்.
மேலும் ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கான வழிகளை கண்டறிவதற்கான மனித வள நிபுணத்துவ அறிவை வழங்குவதாக தெரிவித்தனர்..
நிகழ்ச்சியில் கல்லூரி பேராசியர்கள்,துறை தலைவர்கள்,மாணவ,மாணவிகள் பெற்றோர்கள், என பலர் கலந்து கொண்டனர்..
