கோவை ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு ஜே.சி.ஐ. (JCI) அங்கீகாரம்!!!

sen reporter
0


கோவையில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சர்வதேச தர நிலைகளில் முன்னனி அங்கீகாரமான ஜாயின்ட் கமிஷன் இன்டர்நேஷனல் எனும்  ஜே.சி.ஐ.அங்கீகாரத்தை சென்னை தவிர்த்து  தமிழக அளவில் பெற்ற  முதல் மருத்துவமனை என்ற பெருமையைபெற்றுள்ளதது. கோவை நீலாம்பூரில் உள்ள ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக  சர்வதேச அளவில்  உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதற்காக மருத்துவமனைகளின் வரிசையில் இணைந்துள்ளது.. 

அதன்படி சர்வதேச பராமரிப்பு தரங்களை முறையாக  கடைபிடிக்கும் சுகாதார நிறுவனங்களுக்கு வழங்கப்படும்  ஜாயின்ட் கமிஷன் இன்டர்நேஷனல் எனும்  ஜே.சி.ஐ.அங்கீகாரம் ராயல் கேர் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டிமருத்துவமனையின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான  டாக்டர் மாதேஸ்வரன்செய்தியாளர்களிடம் பேசினார். பேசிய அவர், ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை  மதிப்புமிக்க ஜேசிஐ அங்கீகாரத்தைப் பெறுவதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுவதாக கூறினார்.

இந்தச் சாதனை  மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளை பராமரிப்பதிலும்,அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும்   உலகளாவிய தரநிலைகளைநிலைநிறுத்துவதில் எங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இது  ஒரு சான்று என தெரிவித்தார்.  

குறிப்பாக இந்த மைல்கல்லை எட்டுவதற்கு  எங்கள் மருத்துவர்கள்,நிபுணர்கள்,தெழில்நுட்பவல்லுனர்கள்,செவிலியர்கள், ஊழியர்கள் என அனைவரின் பங்களிப்போடு ஒரு  குழுவின் அர்ப்பணிப்பு இருப்பதாக கூறினார்குறிப்பாக மதிப்புமிக்க இந்த  தங்கத் தர அங்கீகாரத்தைப் பெற்ற தமிழ்நாட்டின் (சென்னையைத் தவிர) முதல் மருத்துவமனை என்பதில் நிர்வாக இயக்குனர் என்ற முறையில் தாம் பெருமை கொள்வதாக கூறிய அவர் இதற்கு காரணமான அனைவருக்கும் இந்த நேரத்தி்ல் நன்றகளை உரித்தாக்குவதாக அவர் தெரிவித்தார்.இந்த சந்திப்பின் போது மருத்துவமனையின் குவாலிட்டி சர்வீஸ் பிரிவின் துணை தலைவர் மருத்துவர் காந்திராஜன்,சர்வதேச தொடர்பு அதிகாரி டாக்டர் மனோகர்,மருத்துவ இயக்குனர் டாக்டர்பரந்தாமன்சேதுபதி,தலைமை செயல் அலுவலர் டாக்டர் மணி செந்தில் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.



Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top