இதன் துவக்க நிகழ்வில் தமிழக அரசின் உயர்கல்வி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால்- கலந்து கொண்டு, சி.ஐ.ஐ. மற்றும் கே. பி.எம்.ஜி. எனும் ஆய்வு அமைப்பு தயாரித்த உயர் கல்வி குறித்த அறிக்கையை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மலர்விழி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, உயர் கல்வி அறிக்கையின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
இதையடுத்து 2050ல் உயர் கல்வியின் எதிர்காலம்; உயர் கல்வியில் நிகழும் மாற்றங்கள்; தொழில்துறைக்கு தயாராகுதலை ஊக்குவித்தல், அறிவுசார்ந்த படைப்புகளை சந்தைப்படுத்துதல்; உள்ளிட்ட தலைப்புகளில் பல்வேறு அமர்வுகள் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் அவர்களது கண்டுபிடிப்புகளையும் அதன் மாதிரிகளை காட்சிப்படுத்தி உள்ளனர்.
