இதில் பேசிய ஜெகத்குரு ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் விஸ்வகர்மா சமுதாயத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு முன்னேற்றம் அடைய வேண்டி சமூக மக்கள் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க போராட வேண்டும் எனவும் எதிர்காலத்தில் குழந்தைகள் அரசு வேலையில் உயர்ந்த பதவியில் இருப்பதற்கு 3.5 இட ஒதுக்கீடு வேண்டி மிகப்பெரிய போராட்டத்தை நாம் கையில் எடுக்க வேண்டும் என்றார்.
கோவை தங்க நகை பட்டறைக்கு வந்து விஸ்வகர்மா தொழிலாளர்களின் நிலைமைகளை ஆய்வு செய்த தமிழக முதல்வருக்கு நன்றிகளை தெரிவித்து கொண்ட அவர் தங்க நகை தொழில் பூங்கா போல் தச்சு வேலை,ஐந்தொழில் விஸ்வகர்மா தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்றார். மேலும் விஸ்வகர்மா சமூகப் பெண்கள் பெயரில் வீட்டுமனை பட்டாவேண்டிஅரசிடம்வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.

