சீர்காழியில்:திருக்குறள்பண்பாட்டுபேரவையின்நிகழ்ச்சி!!!
11/12/2024
0
சீர்காழியில் திருக்குறள் பண்பாட்டு பேரவை சார்பாக மாதாந்திர கூட்டம் சீர்காழி எல் எம் சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.கூட்டத்திற்கு பேரவைத் தலைவர் வே.சக்கரபாணி தலைமை வகிக்க, பேரவையின் பொருளாளர் மு. முத்துக்கருப்பன் முன்னிலை வகிக்க, சீர்காழி தாலுகாவில் உள்ள 10 பள்ளிகளை சார்ந்த சுமார் 200 மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் திருக்குறளைப் பற்றிய கருத்துக்கள் உள்ளடக்கிய பாட்டு இசைத்தல், நடனம் ஆடுதல்,கவிதைகள் வாசித்தல்,போன்ற பல்வேறு செயல்பாடுகளின் மூலம் உலகப் பொதுமறை திருக்குறள் மாணவர்களின் பயன்பாடு மற்றும் ஒழுக்கத்தினை வலுவூட்டல், நன்னெறி கல்வி ஆனது கற்பித்தல் மேலும் மாணவ மாணவிகள் தங்களுடைய திறமையை அரங்கேற்றினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்தனை மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.பேரவை கொள்கைப் பரப்பு செயலர் க.இளங்கோ, நந்த.ராஜேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாட்டுனை செய்தனர். பேரவையின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் சு. வீழிநாதன்,கோ. காழி. வைத்தியநாத சாமி, அ. ராமநாதன், கா.தியாகராஜன்,ச. மு. இந்து மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் எஸ். முரளீதரன், தமிழ் ஆசிரியைகள் மங்கையர்க்கரசி, தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக பேரவையின் செயலாளர் சிவ அன்பழகன் நன்றி கூறினார் .
